A PHP Error was encountered

Severity: Notice

Message: Only variable references should be returned by reference

Filename: core/Common.php

Line Number: 257

Sivakasi Times - Meeting-rajini
Meeting rajini

சென்னை விமான நிலையத்தில் நாளை மோடியுடன் ரஜினி சந்திக்கிறார்,

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாளை சென்னை வருகிறார்.

மீனம்பாக்கத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

முன்னதாக சென்னை வரும் நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் நரேந்திரமோடி, விமான நிலைய ஓய்வறையில் சிறிது நேரம் தங்க உள்ளார். அப்போது அவர் பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் தேர்தல் பிரசார பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள தனது நீண்டநாள் நண்பர்களையும் அவர் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். அதன்படி மோடியின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகர் ரஜினியும் சந்தித்து பேச உள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினியின் ஆதரவை பெற தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் ரஜினியிடம் ஆதரவு கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரஜினி தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நடிகர் ரஜினி மோடியை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஜினி மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதை உணர்த்துவதாகவே இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

All rights reserved by Sivakasi Times Web Design & Development: SSS Technologies & Mee Soft